அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள் - வெளியானது அதிர்ச்சி அறிக்கை!

உலகளாவிய பவளப் பரப்பு இயல்பான அளவை விடக் குறைந்துள்ளதாகவும், மீளப்பெற முடியாத சரிவைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் உலகளாவிய பவளப்பாறை கண்காணிப்பு வலையமைப்பு எச்சரித்துள்ளது.
அடுத்தடுத்து பவள வெளுப்பு நிகழ்வுகள் ஏற்படுவதால், பவளப்பாறைகளுக்கு மீண்டு வர அவகாசம் கிடைப்பதில்லை.
பவள வெளுப்பு நிகழ்வுகளின் அதிர்வெண் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.
கடல் வெப்பநிலை உயர்வதால் பாசிகளை வெளியேற்றும் பவளப்பாறைகள் பட்டினி மற்றும் நோய்களுக்கு ஆளாகின்றன.
2023 ஆம் ஆண்டின் பவள வெளுப்பு உலகின் 77 சதவீதப் பகுதிகளைப் பாதித்தது.
இந்த ஆண்டும் வெளுப்பு நிகழ்வுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
கடல் தளத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தாலும், அனைத்து கடல்வாழ் உயிரினங்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை பவளப்பாறைகள் ஆதரிக்கின்றன.
18 நாடுகள் அடங்கிய பவளத் தீவுகள் மன்றத்தின் உச்சிமாநாட்டை குறைந்தது ஐந்து தலைவர்கள் புறக்கணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




