SuperTopAds

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

​தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், "எங்களது மனஉறுதியை மீண்டும் ஒருமுறை சோதித்துப் பாருங்கள், அதற்குப் பதிலாக இன்னும் கடுமையான விலையைக் கொடுங்கள்.

ஈரானின் பதிலடித் தாக்குதல் மிக விரைவில் வருகிறது தப்பித்து ஓடுங்கள்  எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பிராந்திய மோதல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரானின் உயர் மட்ட அதிகாரியிடமிருந்து வெளியாகியுள்ள இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Radio