போரைத் தொடருமாறு அமெரிக்காவை ஊக்குவிக்கும் இஸ்ரேலுடன் இணைந்த சக்திகள் - ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஈரானுக்கு எதிரான போரைத் தொடருமாறு அமெரிக்காவை, இஸ்ரேலுடன் இணைந்த சக்திகள் ஊக்குவிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்திற்குள் இருக்கும் சில சக்திகள், உலகளாவிய எரிசக்தி சந்தைகளைக் கையாளவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தோல்வியடையும் ஒரு போரில் சிக்க வைக்கவும் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தென்கிழக்கு ஈரானில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு ஆயுதக் குழுவை பாதுகாப்புப் படைகள் கலைத்துவிட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தனியாக அறிவித்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.




