SuperTopAds

ஈரானுக்குச் சொந்தமான பல எரிபொருள் தாங்கி கப்பல்கள் இலங்கையின் பொருளாதார வலயத்தில் தஞ்சம்!

ஆசிரியர் - Editor IV
ஈரானுக்குச் சொந்தமான பல எரிபொருள் தாங்கி கப்பல்கள் இலங்கையின் பொருளாதார வலயத்தில் தஞ்சம்!

ஈரானிய துறைமுகங்களை நோக்கிய கப்பல்களின் போக்குவரத்தை முடக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணையில்  அமெரிக்கப் படைகள் கடுமையான தடைகளை விதித்துள்ளன.

இதன் காரணமாகத் தங்களின் பாதுகாப்பைக் கருதி ஈரானுக்குச் சொந்தமான பல எரிபொருள் தாங்கி நாவாய்கள்  இலங்கைக்குச் சொந்தமான பிரத்தியேக பொருளாதார வலயத்தை (EEZ) ஒட்டிய கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் 'டேங்கர்ட்ராக்கர்ஸ்' (TankerTrackers) அமைப்பு மேற்கொண்ட சர்வதேச கடற்படை புலனாய்வுத் தகவல்கள் மூலம் இந்த விபரம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் தடையினால் ஈரானிய துறைமுகங்களுக்குத் திரும்ப முடியாமல் சர்வதேசக் கடலில் சர்வதேசப் போக்குவரத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இவை நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

​முன்னதாக, காலிக் கடற்பரப்பில் வைத்து ஈரானின் 'IRIS Dena' என்ற நவீன போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய அதிர்ச்சித் தாக்குதலில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் உயிரிழந்தனர் என்பதும், அதில் 32 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் ஈரானிய நாவாய்கள் இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே தஞ்சமடைந்துள்ளதால் இலங்கை கடற்படையும் விமானப்படையும் அப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன.

Radio