SuperTopAds

அமெரிக்க FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணையை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணையை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா!

அமெரிக்காவின் FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை அமைப்பை கொள்முதல் செய்வதற்கான தனது முதல் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஏவுகணையை 2009ஆம் ஆண்டு முதல்வாங்குவதற்கு இந்தியா முயற்சித்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக கொள்முதல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Foreign Military Sales (FMS) திட்டத்தின் கீழ், இதற்கான Letter of Offer and Acceptance ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தகவலை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் Sergio Gor தனது X தளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

''போரில் பரிசோதிக்கப்பட்ட Javelin பீரங்கி எதிர்ப்பு அமைப்பை இந்தியா வாங்க உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் கொள்முதல் எதிர்காலத்தில் Javelin ஏவுகணைகளை இந்தியாவிலேயே இணைந்து உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இந்த ஏவுகணையை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு தசாப்தமாக நடைபெற்று வருகின்றன.

இந்தக் கொள்முதல் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அவசர கொள்முதல் அதிகாரத்தின் (Emergency Procurement Powers) கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அதிகாரத்தின் மூலம், அவசரத் தேவைகளுக்காக அதிகபட்சம் ரூ.300 கோடி வரையிலான நிதி வரம்பிற்குள் இராணுவம் நேரடியாக கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

எனினும், தற்போது கொள்முதல் செய்யப்படும் Javelin ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Radio