இனப்படுகொலையாளி பொஸ்னிய செர்பிய ஜெனரல் ராட்கோ மிலாடிச் சிறையில் மரணம்!

பொஸ்னியா போரின் போது இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக ஆயுள் தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் பொஸ்னிய செர்பிய ஜெனரல் ராட்கோ மிலாடிச் (Ratko Mladic) காலமானார்.
நெதர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் தீர்ப்பாய சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 வயதான மிலாடிச் காலமானதாக ஐக்கிய நாடுகளின் தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது.
1992-1995 பொஸ்னியப் போரின் போது "பொஸ்னியாவின் கசாப்புக்காரர்" என்று வர்ணிக்கப்பட்ட அவர், 1995-ல் குறைந்தது 8,000 பொஸ்னிய முஸ்லிம் சிறுவர்கள் மற்றும் ஆண்கள் படுகொலை செய்யப்பட்ட செப்ரெனிட்சா (Srebrenica) இனப்படுகொலைக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
இந்தக் குற்றங்களுக்காக 2017-ல் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தன் வாழ்நாளின் இறுதி வரை குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த அவர், தீர்ப்பாயத்தின் மீது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.




