எந்தவொரு இஸ்லாமிய நிலப்பரப்பும் அண்டை நாட்டிற்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது - ஈரானிய அதிபர்!

எந்தவொரு இஸ்லாமிய நாட்டின் நிலப்பரப்பும் மற்றொரு அண்டை நாட்டிற்கு எதிராக அல்லது தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார்.
டெஹ்ரானில் நடைபெற்ற 40வது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் போரைத் தொடங்கியது ஈரான் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், ஈரான் எப்போதுமே அமைதியையும் பிராந்திய பாதுகாப்பையுமே விரும்புகிறது என்றும், அதேவேளை நாட்டின் இறையாண்மைக்கு எதிராக வரும் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் உறுதியோடு எதிர்கொள்ளும் என்றும் சுட்டிக்காட்டினார்.




