அதிகரிக்கும் எதிர்ப்பு - பதவியை தக்கவைக்க போராடும் ஃபிஃபாவின் தலைவர் கியானி!

உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபாவின் (FIFA) தலைவர் கியானி இன்பான்டினோ, தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
எனினும், அவரது திட்டங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளன.
அத்துடன் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
56 வயதான இன்பான்டினோ கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஃபிஃபாவின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.
அதேநேரம், சக்திவாய்ந்த உலகத் தலைவர்களுடனான அவரது நெருக்கம் மற்றும் வருமானத்தை பெருக்கும் திட்டங்கள் கால்பந்து விளையாட்டுக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான அவருடைய நெருக்கமும், அவரது வெளிப்படையான தொடர்புகளும், ட்ரம்ப்புக்கு 'ஃபிஃபா அமைதிக்கான விருது' வழங்கப்பட்டதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
உலகக் கிண்ண மற்றும் ஃபிஃபா நிகழ்வுகளின் எதிர்கால லாபத்தில் பங்கு பெற தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
இந்தநிலையில், அடுத்த ஃபிஃபா தலைவர் தேர்தல் , 2027 மார்ச் 18, அன்று மொராக்கோவின் ரபாத் நகரில் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடப்போவதாக கியானி இன்பான்டினோவும் அறிவித்துள்ளார்.
ஃபிஃபாவின் 211 உறுப்பு நாடுகளும் வாக்களிக்கும் இந்த தேர்தலில், வெற்றி பெற 106 வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




