SuperTopAds

அமெரிக்காவின் விரக்தியின் அறிகுறியே ஈரான் மீதான புதிய தடைகள் - அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஏளனம்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவின் விரக்தியின் அறிகுறியே ஈரான் மீதான புதிய தடைகள் - அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஏளனம்!

ஈரான் மீது இதுவரை விதிக்கப்பட்ட தடைகளில் மிகவும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய தடைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை அமெரிக்க நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியிடவுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய தடைகள் அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரங்கள் மற்றும் சர்வதேச நிதி பரிவர்த்தனைகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எனினும், அமெரிக்காவின் இந்த புதிய தடைகள் தொடர்பான அறிவிப்பை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தல், அந்த நாட்டின் விரக்தியின் வெளிப்பாடாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறான பொருளாதார மற்றும் அரசியல் அழுத்த நடவடிக்கைகள் மூலம் ஈரானை வீழ்த்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Radio