Barents Sea பகுதியில் எரிசக்தி ஆய்வுகள் தொடரும் - நோர்வே அறிவிப்பு!

ஐரோப்பிய ஒன்றியம் ஆர்க்டிக் பகுதியில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடுதலுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பரிசீலித்து வரும் நிலையில், நோர்வே தனது Barents Sea பகுதியில் எரிசக்தி ஆய்வுகளைத் தொடரும் என அறிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் எரிவாயு தேவையில் சுமார் 30% வழங்குவதன் மூலம் நோர்வே முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்போதைய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் 2035 வரை உற்பத்தி அளவைப் பராமரிக்க இது அவசியமெனக் கருதுகிறது.
எனினும், இது காலநிலை இலக்குகளுக்கு முரணாகலாம் எனச் சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்துள்ளன.




