சுவிஸில் உணவகம் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் படுகாயம், 5 பேர் மாஜம்!

சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள துசிஸ் கிராமத்தில் உணவகம் தீப்பிடித்து எரிந்தது இருவர் படுகாயம், 5 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்ப்டுகின்றது
நள்ளிரவுக்குப் பிறகு வியாழக்கிழமை நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தின் முக்கிய விவரங்கள்
கீழ் தளத்தில் உணவகமும் (Restaurant), மேல் தளங்களில் சிறிய குடியிருப்பு ஸ்டுடியோக்களும் (Apartments) கொண்ட ஒரு மூன்று அடுக்குக் கட்டிடம் முற்றிலும் தீக்கிரையானது.
கட்டிடத்தில் இருந்த 14 பேர் வெளியேறினர்.
அவர்களில் 8 பேர் காயமடைந்தனர் (2 பேர் மிகக் கடுமையான காயம், 2 பேர் நடுத்தர காயம், 4 பேர் லேசான காயம்).
காயமடைந்தவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் சுவிட்சர்லாந்தின் பல்வேறு முக்கிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.காணாமல் போனவர்கள் கட்டிடத்தில் வசித்து வந்த 5 பேர் இதுவரை கண்டறியப்படவில்லை; அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தீ விபத்தின் போது கட்டிடத்தின் படிக்கட்டுகள் (Stairwell) சரிந்து விழுந்ததால் மீட்புப் பணிகள் கடினமாகின. தீயணைப்பு வீரர்கள் கூரையை கிரேன் மூலம் திறந்து உள்ளே நுழைந்து தேடி வருகின்றனர். சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.காரணம்: கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் தீ முதன்முதலில் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, இது குறித்து போலீசாரும் அரசு வழக்கறிஞர்களும் விசாரித்து வருகின்றனர்.




