ஈரானுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பான பயணத்தை விரும்பும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள்!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள், அரசியல் நிலைப்பாட்டை விட பாதுகாப்பான மற்றும் காப்பீடு செய்யக்கூடிய வழித்தடங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன.
போர்ச் சூழலால் போக்குவரத்து 97% குறைந்திருந்தாலும், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கின்றன.
அமெரிக்காவின் இராணுவப் பாதுகாப்பை சில கப்பல்கள் பெற்றாலும், பெரும்பாலான நிறுவனங்கள் ஈரானின் அனுமதி மற்றும் ஒருங்கினைப்பையே பாதுகாப்பானதாகக் கருதுகின்றன.




