SuperTopAds

பாலஸ்தீனர்கள் மீதான வன்முறையை நிறுத்த போப் லியோ அழைப்பு!

ஆசிரியர் - Editor IV
பாலஸ்தீனர்கள் மீதான வன்முறையை நிறுத்த போப் லியோ அழைப்பு!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீன பொதுமக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என போப் லியோ XIV ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.

இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், நப்லஸ் நகருக்கு தெற்கே உள்ள குஸ்ரா  கிராமத்தில் பாலஸ்தீன வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ள சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

குடியேறிகள் சில வீடுகளைச் சுற்றிவளைத்து, குடிநீர் மற்றும் மின்சார விநியோகத்தை துண்டித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“மேற்குக் கரையில் பாலஸ்தீன பொதுமக்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும்” என்று போப் கூறியதுடன், நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்காக இரு நாடுகள் தீர்வை  முன்னெடுக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவசர அழைப்பு விடுத்தார்.

Radio