மின்சாரப் பிறப்பாக்கி கோளாறு - தென் சீனக் கடலில் நான்கு நாட்கள் தத்தளித்த அமெரிக்கப் போர்க் கப்பல்!

அமெரிக்காவின் USS Benfold வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல், தென் சீனக் கடலில் மின்சாரக் கோளாறு காரணமாக சுமார் நான்கு நாட்கள் கழிப்பறை, சமையலறை சேவை, ஏர் கண்டிஷனிங் மற்றும் நம்பகமான குடிநீர் வசதியின்றி சிக்கலில் இருந்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
ஜூலை 24 அன்று அதன் ஜெனரேட்டர்களில் ஏற்பட்ட பொறியியல் கோளாறு காரணமாக கப்பலால் தனியாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது வெப்பநிலை 32°C முதல் 37°C வரை இருந்தது.
கப்பலில் இருந்த வீரர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மற்றொரு அமெரிக்க கடற்படைக் கப்பல் அவர்களுக்கு சமைத்த உணவை வழங்கியதுடன், மேலும் சில கப்பல்களும் உதவி செய்தன.
பின்னர் USS Benfold பிலிப்பைன்ஸின் சுபிக் பேஹ் (Subic Bay) பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு பழுதுபார்க்கப்பட்டது. ஜூலை 30 அன்று மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.
தேவையான அனைத்து பழுதுபார்ப்புகளும் ஆகஸ்ட் 8 அன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கப்பல் மீண்டும் பணிக்குத் திரும்பியது.
முன்னாள் அமெரிக்க கடற்படை கேப்டன் Carl Schuster, “Puerto Rico அருகே நான்கு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்ததைவிட, தென் சீனக் கடலில் நான்கு நாட்கள் இப்படிப்பட்ட சூழலில் இருப்பது மிகவும் மன அழுத்தமானதாக இருந்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பசிபிக் பகுதியில் அமெரிக்க அழிப்புக் கப்பலில் பதிவான இரண்டாவது மின்சாரக் கோளாறு சம்பவம் இதுவாகும். நீண்டகால உலகளாவிய கடற்படை பணிகளால் அமெரிக்க கடற்படைக்கு ஏற்படும் அழுத்தம் குறித்த கவலைகளும் அதிகரித்து வருகின்றன.




