SuperTopAds

இடையூறு விளைவித்தால் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் - ஓமானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
இடையூறு விளைவித்தால் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் - ஓமானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என ஓமான் நாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அச்சுறுத்தல்கள் நிலவிய போதிலும், ஈரானுடனான மறைமுக தொடர்புகளை டிரம்ப் தொடர்ந்து திறந்தே வைத்துள்ளார்.

தீவிர அழுத்தங்கள் காரணமாக ஈரான் தற்போது மிகவும் பலவீனமடைந்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் கப்பல் போக்குவரத்து பாதைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஓமான் தலையிட்டால், "அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்" என ஃபோக்ஸ் நியூஸ் (Fox News) நேர்காணலில் டிரம்ப் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஓமானுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த போதிலும், ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த தாம் எந்த அவசரமும் காட்டவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Radio