அமெரிக்க படையினரை தமது நாடுகளிலிருந்து வெளியெற்ற தயாராகும் மத்திய கிழக்கு நாடுகள்!

ஈரானுடனான போர்ப் பதற்றச் சூழலுக்கு மத்தியில், அரபு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் அவசியத்தைக் கேள்விக்குட்படுத்தி, அவற்றை அகற்றுவது குறித்தும் தமது பாதுகாப்பு உறவுகளை பல்வகைப்படுத்துவது குறித்தும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தீவிரமாக விவாதித்து வருவதாக அமெரிக்க நாளிதழான 'வாஷிங்டன் போஸ்ட்' (The Washington Post) தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளால் பிராந்திய அமைதி சீர்குலைந்துள்ளதாகக் கருதும் இந்நாடுகள், தங்கள் எல்லைகளுக்குள் அமெரிக்கப் படைகள் இருப்பதைக் குறைப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றன




