SuperTopAds

கரிபா ஏரியில் படகு விபத்து - பலியானோரின் எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

ஆசிரியர் - Editor IV
கரிபா ஏரியில் படகு விபத்து - பலியானோரின் எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

ஸிம்பாப்வேயின் கரிபா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது

இதில் 18 சிறுவர்களும் அடங்குவர்.

ஏரியில் மூழ்கிய ஏனையோரைக் கண்டுபிடிக்க 4 படகுகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட சுழியோடிகள் அடங்கிய குழு தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

90 பேர் மட்டுமே செல்லக்கூடிய திறன் கொண்ட அந்தப் படகில் சுமார் 153 பயணிகள் வரை பயணித்ததாகக் கூறப்படுகிறது.

பலத்த காற்று மற்றும் சுழல் அலைகள் காரணமாகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஸிம்பாப்வே வரலாற்றிலேயே மிக மோசமான படகு விபத்தாக இது கருதப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் கடல்சார் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி எமர்சன் ம்னங்கக்வா (Emmerson Mnangagwa) தெரிவித்துள்ளார்

Radio