SuperTopAds

வல்லரசுகள் தலையிடாமல், ஈரானும் அண்டை நாடுகளும் தங்களுக்குள் பேசி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் - மலேசியப் பிரதமர்!

ஆசிரியர் - Editor IV
வல்லரசுகள் தலையிடாமல், ஈரானும் அண்டை நாடுகளும் தங்களுக்குள் பேசி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் - மலேசியப் பிரதமர்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான வன்முறைத் தாக்குதல்களைக் கண்டித்து மலேசியா நாடாளுமன்றத்தில் வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், சர்வதேச விதிகளை மீறும் இந்தச் செயலைத் தன் நாடு வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தைக் கோரியுள்ளார்.

மேலும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஈரானின் உறுதியையும் தாங்கும் திறனையும் பாராட்டியுள்ளார்.

அத்துடன் உலக வல்லரசுகள் தலையிடாமல், ஈரானும் அதன் அண்டை நாடுகளும் தங்களுக்குள் பேசி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Radio