SuperTopAds

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த பங்களாதேஷ்!

ஆசிரியர் - Editor IV
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த பங்களாதேஷ்!

அவுஸ்திரேலியா டார்வின் (Darwin) நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 198 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அவுஸ்திரேலியாவின் முதலாவது இன்னிங்ஸில் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பங்களாதேஷ் அணிக்கு முக்கியப் பங்காற்றினார்.

பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸில் தன்சித் ஹசன்  101 ஓட்டங்களையும், அணித் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ  84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸை 284 ஒட்டங்களுக்கு பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர்.

மெஹிதி ஹசன் மிராஸ்  5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் பங்களாதேஷ் அணி எளிதான வெற்றி இலக்கான 57 ஓட்டங்களை 9 விக்கெட் வித்தியாசத்தில் பெற்று தனது வெற்றியினை ஈட்டியது.

அதன்படி அவுஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் பங்களாதேஷ் பெறும் வரலாற்று வெற்றியாக இது பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து , உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தரவரிசையில் பங்களாதேஷ் அணி நான்காவது இடத்தினையும் , அவுஸ்திரேலியா அணி முதலாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio