பெய்ரூட்டின் தாஹியே பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் - பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தாஹியே பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பிற்கு ஈரான் உடனடி பதிலடி கொடுக்கும் என அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.




