இஸ்ரேலின் டிமோனா அணு ஆராய்ச்சி மையத்தின் பாதுகாப்புத் தரவுகள் 'ஸ்ட்ராவா' உடற்பயிற்சி செயலி மூலம் கசிவு!

சைப்ரஸில் உள்ள பிரிட்டனின் RAF அக்ரோதிரி ராணுவத் தளம் மற்றும் இஸ்ரேலின் டிமோனா அணு ஆராய்ச்சி மையத்தின் பாதுகாப்புத் தரவுகள், 'ஸ்ட்ராவா' உடற்பயிற்சி செயலி மூலம் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இராணுவ வீரர்களின் GPS பதிவுகள் மூலம் உளவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




