SuperTopAds

வெர்ஜீனியா பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச் சூட்டு - ஐவர் காயம் !

ஆசிரியர் - Editor IV
வெர்ஜீனியா பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச் சூட்டு - ஐவர் காயம் !

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் தங்குமிட விடுதிக்கு வெளியில், உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 1:28 அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய நால்வருக்கும் ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பல சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ள போதிலும், அங்குப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவிருந்த நிலையிலும், மாணவர்கள் விடுதிகளுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்த பின்னணியிலுமே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

Radio