இந்தோனேசியாவில் புவி நடுக்கம் - 38 க்கும் அதிகமானோர் பலி!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் தணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்ட பலத்த பின்னதிர்வுகளும் கட்டிடங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




