இஸ்ரேலிய பிரதமர் நியூசிலாந்திற்குள் நுழைந்தால் கைதுசெய்யப்படுவார் - பிரதமர் கிறிஸ்டோபர்லக்சன்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடியாணை அமுலில் உள்ள நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூசிலாந்திற்குள் நுழைந்தால் நீதிமன்றத்திற்கான தமது கடமைகளை நிறைவேற்றி அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கிறிஸ்டோபர்லக்சன் உறுதிப்படுத்தியுள்ளது.
காசா மோதல் தொடர்பான போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 2024 நவம்பர் 21 அன்று ஐசிசி இந்தப் பிடியாணையைப் பிறப்பித்தது.
குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய அரசாங்கம் கடுமையாக மறுத்து வரும் போதிலும், சர்வதேச சட்ட அமைப்பின் மீது தாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் காரணமாக ஐசிசி இன் பிடியாணைகளை அமல்படுத்தக் கடமைப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.




