ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் - கண்டிக்கும் சவுதி!

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு ADNOC எண்ணெய்க் கப்பல்களை ஈரான் தாக்கியதை சவுதி அரேபியா கண்டித்துள்ளது.
இந்தத் தாக்குதல் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்தத் தாக்குதலுக்கு ஈரானே பொறுப்பு என சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளதுடன், ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தனது முழுமையான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது




