ஆப்ரஹாம் லிங்கன் போர்க்கப்பலில் பணியாற்றும் மாலுமிகளின் குடும்பத்தினர் கடும் கவலை!

அமெரிக்காவின் ஏப்ரஹாம் லிங்கன் போர்க்கப்பலில் பணியாற்றும் மாலுமிகளின் குடும்பத்தினர் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.
எட்டு மாதங்களாக கடலில் நீடிக்கும் பணியால் மாலுமிகள் கடும் மனஅழுத்தம், உடல் சோர்வு மற்றும் மோசமான வாழ்க்கை சூழலை எதிர்கொள்வதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈரானுக்கு எதிரான போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் வீரர்களின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.




