SuperTopAds

தொடர் மழை - மணிலாவில் குவிந்த குப்பைகள் - மீட்புப் பணிகள் தீவிரம் - 16 பேர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor IV
தொடர் மழை - மணிலாவில் குவிந்த குப்பைகள் - மீட்புப் பணிகள் தீவிரம் - 16 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் குவிந்துள்ள பெருமளவிலான குப்பைகளை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒன்பது நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் அதிகமான மழையளவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் விபத்துகளில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Radio