பிரான்ஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையமருகே பாரிய தீ விபத்து - விமான சேவைகள் முடக்கம்!

பிரான்ஸின் பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள Avenue de la Gare எனும் பகுதியில் அமைந்துள்ள வணிகக் கிடங்கு ஒன்றில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது.
இதனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான வாகனங்கள் முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளன.
மேலும், குறித்த வளாகத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த சுமார் 80 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள பல வீதிகள் மூடப்பட்டதுடன், அப்பகுதிவாசிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்த அவசர நிலை காரணமாக, சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் 4 ஓடுபாதைகளில் 2 ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், ஒரு விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்த விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.




