ரஷ்யா - உக்ரைன் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் - பாப்பரசர் லியோ வேண்டுகோள்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என பாப்பரசர் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், வத்திக்கானில் தனது வாராந்திர பிரார்த்தனையின் போது சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மதிக்குமாறும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
துயரமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன உண்மையில் அவை அதிகரித்து, குழந்தைகள் உட்பட பல பொதுமக்களைப் பலியாக்குகின்றன" என அவர் கூறினார்.
போர் மேலும் போருக்கே வழிவகுக்கும், அத்துடன் பேரழிவுகளையே ஏற்படுத்தும் என்று தனது செய்தியில் குறிப்பிட்ட பாப்பரசர், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும், அமைதிக்கான பாதையை வகுக்கப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், சூடான் மக்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்திய அவர், பொதுமக்களுக்கு மனிதநேய உதவியளிப்பதற்கான பாதைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், உடனடி போர்நிறுத்தத்திற்கான முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




