SuperTopAds

மோதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் - ஈரான் தேசியப் பாதுகாப்பு மன்றச் செயலாளர்!

ஆசிரியர் - Editor IV
மோதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் - ஈரான் தேசியப் பாதுகாப்பு மன்றச் செயலாளர்!

அமெரிக்காவிடம் இழப்பீடு கோரியுள்ளது ஈரான்

அமெரிக்கா ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என ஈரானின் தேசியப் பாதுகாப்பு மன்றச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தம்மீதான தடைகளை நீக்க வேண்டும், மேலும் தங்கள் நாட்டிற்கு எதிராக சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டு போர்களுக்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகமாக இருக்கும் நிலையில், வாஷிங்டனிடம் இருந்து பெரிய நிதி மற்றும் அரசியல் சலுகைகளை தெஹ்ரான் நாடுகிறது என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது.

சமீபத்திய மோதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா பொறுப்பேற்று ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் கூறுகிறது.

Radio