பேச்சுக்கள் எதுவும் இடம்பெறவில்லை - இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்படுகின்றன - ஈரான்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்படுகின்றன என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாக, மெஹர் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவது தொடரும் வரை பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று அராக்சி கூறியதாக மெஹர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஓமானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், ஜலசந்தியில் புதிய கப்பல் வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்றும் அராக்சி கூறியுள்ளார்.
ஆனாலும் ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.




