சட்டவிரோத குடியேற்றம் - நெதர்லாந்து அரசின்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்!

நெதர்லாந்தின் பல பகுதிகளில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அகதிகள் தொடர்பான அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிரியா, ஆப்கானிஸ்தான், எரிட்ரியா, ஈராக், யேமன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் அதிகரித்து வருவதாகக் கூறி, அரசின் தற்போதைய குடியேற்றக் கொள்கைக்கு எதிராக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
போராட்டக்காரர்கள், அதிகரித்து வரும் குடியேற்றம் வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
இதனால் எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், சட்டவிரோதமாக நுழைவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அகதிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில நகரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதால், காவல்துறையுடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவர தடுப்பு போலீசார் களமிறக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும், நாடு முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
தற்போது குடியேற்றம் மற்றும் அகதி கொள்கை நெதர்லாந்தின் முக்கிய அரசியல் விவாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது




