SuperTopAds

ஈராக்கின் 'ஃப்ளை பாக்தாத்' மீதான தடையை நீக்கும் அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
ஈராக்கின் 'ஃப்ளை பாக்தாத்' மீதான தடையை நீக்கும் அமெரிக்கா!

ஈராக்கின் 'ஃப்ளை பாக்தாத்' (Fly Baghdad) வானூர்தி நிறுவனம் மற்றும் அதன் இரண்டு வானூர்திகள் மீது விதிக்கப்பட்டிருந்த பயங்கரவாத எதிர்ப்புத் தடைகளை அமெரிக்க திறைசேரி திணைக்களம் (US Treasury) நீக்கியுள்ளது.

குறிப்பிட்ட வானூர்தி நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் 'இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் குட்ஸ் படைக்கு' (IRGC Quds Force) உதவி புரிந்ததாகக் கூறி, கடந்த 2024-ஆம் ஆண்டு ஃப்ளை பாக்தாத் நிறுவனம் மீது அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது.

எனினும் வளைகுடா பகுதியில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளுக்கும்,இந்தத் தடை நீக்கத்திற்கும் எந்தவிதத் நேரடித்தொடர்பும் இல்லை என்றும் அமெரிக்க திறைசேரி திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

Radio