SuperTopAds

மற்றுமொரு குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய சீனா!

ஆசிரியர் - Editor IV
மற்றுமொரு குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய சீனா!

சீனா தனது மற்றுமொரு குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள் தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

அந்த நாட்டு நேரப்படி நேற்று (04) மாலை 4.52 மணியளவில், ஹைனான் வர்த்தக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து Long March-8A ஏவுகணை மூலம் இந்த செயற்கைக்கோள் தொகுதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இதன் மூலம், குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள்களின் 23ஆவது தொகுதி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, இந்த விண்வெளி நடவடிக்கை முழுமையாக வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

Radio