இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மீட்கப்பட்ட 112 பாலஸ்தீனியர்களுக்கான கூட்டு இறுதிச் சடங்கு!

காசாவில் கொல்லப்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மீட்கப்பட்ட 112 பாலஸ்தீனியர்களுக்கான கூட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றதை 'ரோயா' (Roya) ஊடகத்தின் செய்தியாளர் எடுத்த புகைப்படங்கள் காட்டுகின்றன.
இதேநேரம் காசா முனை முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இன்நிலையில், அடையாளம் காணும் நடைமுறைகளுக்குப் பிறகு அவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.




