ஈரானை அழிக்க நினைப்பவர்களின் ஆசை 'கல்லறைக்கே செல்லும்' - பொருளாதார அமைச்சர் அலி மதனிஸாதே!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில், குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கான பொருளாதார மீள்தன்மைத் திட்டம் தயாராக உள்ளதாக ஈரானின் பொருளாதார அமைச்சர் அலி மதனிஸாதே தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் எதிரிகளின் சதிகளுக்குப் பதிலடி கொடுக்கவும் அரசாங்கம் முழுத் தயார் நிலையிலிருப்பதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க ஈரானிடம் பதில் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் பொருளாதார ரீதியாக ஈரானை அழிக்க நினைப்பவர்களின் ஆசை 'கல்லறைக்கே செல்லும்' என அந்த நாட்டுப் பொருளாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது சர்வதேச அளவில் பொருளாதாரத் தடைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கவும் பொருளாதாரச் சீர்குலைவைத் தடுக்கவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




