ராகம பொலிஸ் பிரிவில் ஊரடங்கு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சம்பவத்தைத் தொடர்ந்து, ராகம பொலிஸ் பிரிவு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை உடனடி அமலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தேவையற்ற வகையில் வெளியே செல்லாமல், பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




