ஈரான் மீதும் வரிகள் விதிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் - ட்ரம்ப்!

ரஷ்யா மீது விதிக்கப்படவுள்ள புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த சட்டமூலத்தில், ஈரானுக்கு எதிரான இறக்குமதி வரிகளையும் அமெரிக்கக் காங்கிரஸ் (நாடாளுமன்றம்) இணைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈரான் மீதும் வரிகள் விதிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்; அது இந்த சட்டமூலத்தை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
எகிப்தின் டமியேட்டா (Damietta) துறைமுகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்துத் தமக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், "தற்போது அவர்களை மிகவும் பலமாகத் தாக்கும் முறை எங்களுடையது; தாக்குதல் வரப்போகிறது என்பதை அவர்களும் அறிவார்கள்" எனக் கூறியுள்ளார்.
மேலும், "ஒரு கட்டத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படுகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




