அமெரிக்காவின் நேரடி உதவி இல்லாமல் ஹூதிகளைத் சமாளிக்க முடியும் - சவுதி அரேபியா!

சவுதி அரேபியா ஜே.டி. வான்ஸிடம் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்தது
ஈராக் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இணைந்து தாக்குதல்கள் நடத்திய போதிலும், ஈரானுடன் அமைதியான முறையிலே சுமூகத் தீர்வு காணவே தற்போதும் விரும்புவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் துணை அதிபரிடம் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் ஒரு சிவப்பு கோட்டைத் தாண்டிய செயலாகும் என்பதால் அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது
ஆனால் அத்தாக்குதல்கள் மேலும் மோதலை அதிகரிப்பதற்காக அல்ல, மாறாக ஹூதிகளுக்குத் தடுத்து எச்சரிக்கை விடுக்கவே நடத்தப்பட்டன.
நெதன்யாகு மோதலை மேலும் அதிகரிக்க முயல்வதாகவும், சவுதி அரேபியாவோ அமைதியையே விரும்புவதாகவும், அமெரிக்காவின் நேரடி உதவி இல்லாமலேயே ஹூதிகளைத் சமாளிக்க முடியும் என்றும், அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.




