பூமியின் தாழ்வட்டப் பாதையில் 10 இலட்சம் செயற்கைக் கோள்களை ஏவ ஸ்பேஸ்எக்ஸ் திட்டம்!

செயற்கை நுண்ணறிவு AI டேட்டா சென்டர்களை அமைப்பதற்காக, பூமியின் தாழ்வட்டப் பாதையில் 10 லட்சம் வரை செயற்கைக்கோள்களை ஏவ ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது.
சூரிய ஆற்றலில் இயங்கும் இது, புவிசார் மையங்களை விட மலிவானது என நிறுவனம் கூறினாலும், விண்வெளி விபத்துகள் மற்றும் மாசுபாடு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.




