முன்பிருந்த நிலைமை இனி ஒருபோதும் திரும்பாது - மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்யா சீற்றம்!

மேற்கத்திய நாடுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதால், ரஷ்யாவின் பொறுமை எல்லை கடந்துவிட்டதாக வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 2022க்கு முன்பிருந்த நிலைமை இனி ஒருபோதும் திரும்பாது என்று அதிபர் புதின் கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், மேலைநாடுகளின் இரட்டை நிலையை வெளிப்படையாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.




