ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதை மீண்டும் முடக்கிய ஹங்கேரி!

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையின் இரண்டு முக்கிய பிரிவுகளைத் தொடர விடாமல் ஹங்கேரி மீண்டும் முடக்கியுள்ளது.
பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்தியுள்ள புடாபெஸ்ட், மேற்கு பால்கன் நாடுகளை விட உக்ரைனுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க அரசியல் மட்டத்திலான தலையீடு தேவைப்படும் என ஐரோப்பிய தூதர்கள் தெரிவித்துள்ளனர்.




