பிரிக்ஸ் அமைப்பில் எந்த ஒரு நாடும் மற்ற நாடுகளின் மீது தனது கருத்துக்களை திணிப்பதில்லை - ரஷ்யா!

பிரிக்ஸ் கூட்டமைப்பு, நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பில் எந்த ஒரு நாடும் மற்ற நாடுகளின் மீது தனது கருத்துக்களை திணிப்பது இல்லை என்றும், பரஸ்பர மரியாதையுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




