SuperTopAds

ஏழரை தசாப்தங்களின் பின் சவுதியில் நிகழவுள்ள அபூர்வம்!

ஆசிரியர் - Editor IV
ஏழரை தசாப்தங்களின் பின் சவுதியில் நிகழவுள்ள அபூர்வம்!

சவுதி அரேபியாவில் 77 ஆண்டுகளுக்குப் பிறகு, 2027 ஆகஸ்ட் 2 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கிரகணம் சவூதியின் சில பகுதிகளில் சுமார் 6 நிமிடங்கள் வரை முழுமையாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரகணத்தின் போது பகல் நேரம் தற்காலிகமாக இருண்டு, அந்திப் பொழுது போன்ற சூழல் உருவாகும். மேலும், வெப்பநிலையிலும் குறிப்பிடத்தக்க அளவு குறைவு ஏற்படக்கூடும் என ஜித்தா வானியல் சங்கத்தின் தலைவர் மஜித் அபு ஜஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு உலகின் பல பகுதிகளில் இருந்து வானியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் அரிய வானியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது

Radio