ஹொர்முஸ் நீரிணை விவகாரம் - புதிய திட்டம் முன்வைத்த ஓமான்!

சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையான 'ஹொர்முஸ் நீரிணைப்பு' மூடப்பட்டுள்ளதால் உலகளவில் பெரும் பொருளாதாரத் தேக்கநிலை நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், இப்பாதையை மீண்டும் திறப்பதற்கான ஒரு புதிய நம்பிக்கை தற்போது தோன்றியுள்ளது.
வளைகுடா நாடுகளின் முழு ஆதரவுடன், ஓமன் ஒரு புதிய கட்டணத் திட்டத்தை (Voluntary Fee Plan) ஈரானிடம் அதிகாரப்பூர்வமாக முன்மொழிந்துள்ளது.
உலக வர்த்தகத்தை மீட்டெடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்தை ஈரான் அரசு தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் சுமார் 20% பங்கைக் கொண்டுள்ள இந்த கடல்வழிப் பாதை மீண்டும் திறக்கப்பட்டால், சர்வதேச சந்தையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரம் ஓமனின் இந்த அமைதி முயற்சி வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




