அனைத்துத் துறைகளையும் ஆழமாகக் கற்றறிந்தவர் புடின் -.கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனைத்துத் துறைகளையும் ஆழமாகக் கற்றறிந்தவர் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் எந்தவொரு துறை சார்ந்த வல்லுநர்களுடனும் அறிவுப்பூர்வமாக விவாதிக்கும் திறன் கொண்டவர் என்றும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
புடினின் இந்த ஆற்றல் அவரது தனித்துவமான தலைமைப் பண்பைக் காட்டுவதாக அவர் பாராட்டியுள்ளார்.




