காசாவில் இனப்படுகொலை - நெதன்யாகுவே பொறுப்பு என்று நான் கருதுகிறேன் - சாதிக் கான்!

காசாவில் இனப்படுகொலை நடைபெற்று வருவதாக நான் உறுதியாக நம்புகிறேன்.
அத்துடன் இதற்கு நெதன்யாகுவே பொறுப்பு என்று நான் கருதுகிறேன்," என்று சாதிக் கான் கூறியுள்ளார்.
"மேலும், இனப்படுகொலையை நிகழ்த்தியவர் என்ற முறையில் அவர் சட்டத்தை மீறியுள்ளார் என்று நான் கருதுகிறேன் என்றும் சுட்டிக்காட்டிய அசர், நீதி நிலைநாட்டப்பட வேண்டும்; அதாவது அவர் சட்டத்தின் முன் அவர் நிறுத்தப்பட வேண்டும்," என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை இஸ்ரேலிய'ப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்குள் நுழைந்தால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்டின் கீழ் அவரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி, நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியுடன் அமெரிக்கப் பிரதிநிதி ரோ கன்னா (D-Calif.) வெள்ளிக்கிழமையன்று இணைந்தார்.




