உலகின் மிக நீளமான கடலடிச் சாலை சுரங்கத்தை உருவாக்கும் நோர்வே!

நார்வே, உலகின் மிக நீளமான மற்றும் மிக ஆழமான கடலடிச் சாலை சுரங்கமாக உருவாகவுள்ள ரோக்ஃபாஸ்ட் (Rogfast) சுரங்கத் திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறது.
இந்த சுரங்கம் சுமார் 27 கிலோமீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 390 மீட்டர் ஆழத்திலும் அமைக்கப்படுகிறது. இது நார்வேயின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள நகரங்களை நேரடியாக இணைத்து, படகு சேவைகளின் தேவையை குறைத்து, பயண நேரத்தை கணிசமாக மிச்சப்படுத்தும்.
பாதுகாப்பை அதிகரிக்க இரட்டை சுரங்கப் பாதைகள் (Twin Tubes) அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் போக்குவரத்து சீராக நடைபெறுவதோடு, அவசரநிலைகளிலும் பாதுகாப்பான இயக்கம் சாத்தியமாகும்.
இந்த மிகப்பெரிய கட்டுமானத் திட்டம் நிறைவடைந்த பிறகு, பிராந்தியங்களுக்கிடையேயான இணைப்பு வலுப்பெற்று, பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




