ஈரான் அணு தளத்தை அமெரிக்காவால் அழிக்க முடியாது - இஸ்ரேல்!

இஸ்ரேல் ஊடகங்களின் தகவலின்படி, ஈரானின் நதான்ஸ் அணு வளாகத்திற்கு அருகிலுள்ள பிக்ஆக்ஸ் மவுண்டன் என்ற ஆழமான நிலத்தடி அணு வசதி, ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தில் மிக முக்கியமான மற்றும் பாதுகாப்பான மையமாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேல் உளவுத்துறை தகவலின்படி, ஆயிரக்கணக்கான யுரேனியம் சென்ட்ரிஃப்யூஜ்கள் இந்த மலைக்குள் அமைக்கப்பட்டுள்ள சுரங்கங்களில் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 1,608 மீட்டர் உயரமுள்ள மலையின் ஆழப்பகுதியில் அமைந்துள்ள இந்த வளாகம், பல அடுக்கு கான்கிரீட் பாதுகாப்பு மற்றும் நூற்றுக்கணக்கான மீட்டர் தடிமனான பாறைகளால் சூழப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் மதிப்பீட்டின்படி, அமெரிக்காவின் சக்திவாய்ந்த GBU-57 Massive Ordnance Penetrator போன்ற “bunker-buster” குண்டுகளாலும் இந்த வசதியை முழுமையாக அழிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “Pickaxe Mountain ஐ தாக்குவோம்; ஈரான் தயாராக இருக்கட்டும்” என்று எச்சரித்திருந்தாலும், அந்த வளாகத்தின் உண்மையான செயல்பாடுகள் குறித்து உறுதியான தகவல் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.




