SuperTopAds

அமெரிக்காவின் ஒவ்வொரு படைவீரின் இழப்புக்கும் ஈரான் பல மடங்கு விலையை செலுத்த நேரிடும் - டொனால்ட் ட்ரம்ப்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவின் ஒவ்வொரு படைவீரின் இழப்புக்கும் ஈரான் பல மடங்கு விலையை செலுத்த நேரிடும் - டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் ஒவ்வொரு படைவீரருக்கும் ஈரான் பல மடங்கு விலையை செலுத்தவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தனது சமூக ஊடகப் பதிவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஏற்கனவே ஈரானிய தாக்குதலால் அமெரிக்க படையினர் உயிரிழப்பதை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த வாரம் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து, தங்கள் எதிரியான சவூதி அரேபியாவுக்கு எதிராகக் கடல்வழித் தடையை ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் எறிகணையால் தாக்கப்பட்டதில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரிந்தது.

அதிலிருந்த ஊழியர்கள் கப்பலை விட்டு வெளியேறிய நிலையில், பின்னர் இழுவைப்படகு மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர்.

இது இவ்வாறிருக்க, 2024-இல் காஸாவில் இஸ்ரேலால் உயிரிழந்த யஹ்யா சின்வாருக்குப் பிறகு, ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது